நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் தேர்தலில் விதிமீறல்கள் தொடர்பாக மேலும் 2 விசாரணை அறிக்கைகளை போலிஸ் திறந்துள்ளது: போலிஸ்

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் தேர்தலில் விதிமீறல்கள் தொடர்பாக மேலும் 2 விசாரணை அறிக்கைகளை போலிஸ் திறந்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் தலைவர் அல்சாஃப்னி அஹ்மத் இதனை கூறினார்.

கடந்த ஜூலை 18 அன்று நெகிரி செம்பிலான் மாநில தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது.

அப்போதில் இருந்து தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக போலிசார் நான்கு விசாரணைப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளது. 

இதில், சொத்து சேதம் தொடர்பான இரண்டு வழக்குகள் திங்கட்கிழமை பதிவு செய்யப்பட்டன.

கடந்த மூன்று நாட்களில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக ஏழு புகார்கள் தமது துறைக்கு வந்துள்ளது.

அவற்றில் நான்கு புகார்கள் ஜூலை 20 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெறப்பட்ட நான்கு அறிக்கைகளில், சொத்து இழப்பு அல்லது சேதத்தை ஏற்படுத்தும் தீங்கிழைக்கும் செயல்கள் தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427-இன் கீழும், தீ வைப்பதன் மூலம் சொத்து இழப்பு அல்லது சேதத்தை ஏற்படுத்தும் தீங்கிழைக்கும் செயல்கள் தொடர்பான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 435-இன் கீழும் இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset