நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

BN - PN அரசியல் கூட்டணி ஒத்துழைப்பு என்பது வாக்கினை சிதறுவதைத் தடுக்கும்: மசீச தலைவர் வீ கா சியோங் தகவல் 

பெட்டாலிங் ஜெயா- 

தேசிய முன்னணியும் தேசிய கூட்டணியும் இணைந்து செயல்படுவதால் நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் வாக்குகள் சிதறுவதைத் தடுக்க முடியும் என்று மலேசிய சீனர் சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங் கூறினார் 

இந்த அரசியல் வியூக ஒத்துழைப்பு என்பது பல்வேறு போட்டியைத் தடுக்கவும் வாக்குகள் சிதறாமல் இருப்பதை உறுதி செய்யவும் இது உதவும் என்று அவர் தெரிவித்தார். 

"நெகிரி செம்பிலானின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, ஒரு நிலையான, திறமையான மற்றும் செயல்திறன் மிக்க அரசாங்கத்தை நிறுவுவதே இந்த ஒத்துழைப்பின் நோக்கம்" என்று சிரம்பானில் 
நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி 25 இடங்களிலும் தேசிய கூட்டணி 11 இடங்களிலும் போட்டியிடுகிறது. இரு கட்சிகளும் ஒன்றோடு ஒன்று மோதவில்லை 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்து 36 சட்டமன்ற இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset