செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு தேன்நிலவு மாதம் எதுவும் கிடையாது: மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி தகவல்
ஜொகூர் பாரு-
ஜொகூர் மாநில ஆட்சிக்குழுவில் பொறுப்பேற்றுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு இனி தேன்நிலவு மாதங்கள் கிடையாது என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி கூறினார்.
ஜொகூர் மாநில மக்களால் வழங்கப்பட்ட மகத்தான மற்றும் மதிப்புமிக்க ஆணையானது, வலுவான பணியாகவும், திறமையான சேவை வழங்கலாகவும், சமூகத்தின் அனைத்துத் தரப்பினராலும் உணரக்கூடிய உறுதியான முடிவுகளாகவும் மாற்றப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
ஜொகூர் மாநில அரசாங்கத்தில் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்ற அனைத்து 10 சட்ட்மன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று அவர் தெரிவித்து கொண்டார்.
அனைத்து ஜொகூர் மாநில மக்களுக்கும் மக்களுக்கும் மேலும் வளர்ச்சியடைந்த, செழிப்பான மற்றும் வளமான ஜொகூரைக் கட்டியெழுப்பும் பொருட்டு, MAJU JOHOR 2030 செயல்திட்டத்தை அதிக கவனத்துடனும் செயல்திறனுடனும் தொடர்வதே இனிமேல் மாநில அரசின் முன்னுரிமையாகும் என்று அவர் சொன்னார்.
முன்னதாக, இங்குள்ள இஸ்தானா புக்கிட் செரெனேவில் , 10 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜொகூர் இடைக்கால சுல்தான் துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் முன், ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2026, 7:57 pm
உயர் கல்வி கனவு நனவாகுவதற்கு முன்பே சாலை விபத்தில் லாவண்யாவின் உயிர் பிரிந்தது
July 18, 2026, 7:07 pm
தேர்தலில் ஆதரவையும் வாக்குகளையும் யாராவது நிராகரிப்பார்களா?: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி
July 18, 2026, 3:04 pm
10 ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்பு
July 18, 2026, 2:17 pm
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் மூன்று இந்தியர்கள் நேரடிப் போட்டி
July 18, 2026, 2:16 pm
