நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமீம் தஹ்ரி போலிசில் சரணடைந்தார்

போர்ட்டிக்சன்:

முகநூல் மிரட்டல் வழக்கைத் தொடர்ந்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றதாகக் கருதப்பட்ட சமூக ஆர்வலர் தமீம் தாஹ்ரி போர்ட்டிக்சன் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் சரணடைந்தார்.

33 வயதான அவர் நேற்று பிற்பகல் சுமார் 12.45 மணியளவில் சரணடைந்ததாக நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மத்
கூறினார்.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி மாலை சுமார் 6.25 மணியளவில், முகநூலில் சந்தேக நபரால் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஒரு இந்தியர் அளித்த புகாரை அடுத்து விசாரணைகள் தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.

அந்தப் புகாரைத் தொடர்ந்து, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 506 மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் காவல்துறை ஒரு விசாரணை அறிக்கையை தொடங்கியது.

சிலாங்கூரில் உள்ள காஜாங் பகுதியைச் சுற்றி சந்தேக நபரைத் தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் அந்த நபர் மார்ச் 9 ஆம் தேதி புக்கிட் காயு ஹீத்தாம் எல்லைச் சோதனைச் சாவடி வழியாக தாய்லாந்திற்குத் தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்தது என்று  அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset