நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியின் நீல அலை நெகிரி செம்பிலான் மாநிலம் முழுவதும் பரவியுள்ளது: டத்தோஸ்ரீ தனேந்திரன்

ரந்தாவ்:

தேசிய முன்னணியில் நீல அலை நெகிரி செம்பிலான் மாநிலம் முழுவதும் பரவியுள்ளது.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநில தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலில் முழுக்க முழுக்க  நீல அலை வீசியது.
துணைப் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, ஆயிரக்கணக்கான தேசிய முன்னணி ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டணி வேட்பாளர்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதற்காக ரெம்பாவ் நாடாளுமன்ற சேவை மைய வளாகத்திற்கு வந்தார்.

குறிப்பாக மக்கள் சக்தி கட்சியின் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் நானும், அனைத்து தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கும் முழு ஆதரவைத் தெரிவிக்க வந்திருந்தோம்.

நெகிரி செம்பிலான் மக்கள், இந்த மாநிலத்திற்கு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்த அனுபவம் வாய்ந்த, நிலையான, நிரூபிக்கப்பட்ட தலைமையையே தொடர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

மக்களின் பெருகிவரும் எழுச்சிமிக்க உணர்வு,

தேசிய முன்னணி  ஒரு மகத்தான வெற்றியுடன் நீல அலை மீண்டும் நெகிரி செம்பிலானுக்கு  நம்பிக்கையை அளிக்கிறது.

இதன் அடிப்படையில் நெகிரி செம்பிலானின் நிலைத்தன்மை, முன்னேற்றம், ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக தேசிய முன்னணிக்கு மீண்டும் ஆணை வழங்கப்படுவதை உறுதி செய்ய நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று டத்தோஸ்ரீ தனேந்திரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset