செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் மாநில அரசைத் தொடர்ந்து வழிநடத்த நம்பிக்கை கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்: அன்வார்
கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநில அரசைத் தொடர்ந்து வழிநடத்த நம்பிக்கை கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும்.
நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூன் அவர்களின் தலைமையில் தூய்மையான, நிலையான மற்றும் நேர்மை அடிப்படையிலான நிர்வாகம் தொடர வேண்டும்.
இதை உறுதி செய்வதற்காக நம்பிக்கை கூட்டணிக்கு ஒரு வலுவான மக்கள் ஆணையை வழங்க வேண்டும்.
2018-ல் கூட்டணி மாநில நிர்வாகத்தைப் பொறுப்பேற்றதிலிருந்து, மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் செயல்படுத்தியுள்ளது.
இருப்பினும், நெகிரி செம்பிலான் மக்கள் அனைவரும் அதன் பலன்களைப் பெறும் வகையில், இன்னும் பல வளர்ச்சி, நலத்திட்டங்கள் தொடரப்பட வேண்டியுள்ளது.
சகோதரர் அமினுடின் ஹரூனின் தலைமையில் ஒரு தூய்மையான, நிலையான மற்றும் நேர்மை அடிப்படையிலான நிர்வாகம் தொடர்வதற்காக, நம்பிக்கை கூட்டணிக்கு வலுவான ஆணையை வழங்குமாறு நெகிரி செம்பிலான் மக்களின் பரிசீலனையையும் நம்பிக்கையையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரமருமான டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2026, 10:42 am
ஒருவரை கடத்தி 7 மில்லியன் ரிங்கிட் பணம் கோரப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது: டத்தோ குமார்
July 19, 2026, 7:47 am
தமீம் தஹ்ரி போலிசில் சரணடைந்தார்
July 18, 2026, 7:57 pm
உயர் கல்வி கனவு நனவாகுவதற்கு முன்பே சாலை விபத்தில் லாவண்யாவின் உயிர் பிரிந்தது
July 18, 2026, 7:07 pm
