செய்திகள் மலேசியா
ஒருவரை கடத்தி 7 மில்லியன் ரிங்கிட் பணம் கோரப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது: டத்தோ குமார்
கோலாலம்பூர்:
சிலாங்கூரில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில், ஒருவரைக் கடத்தி 7 மில்லியன் ரிங்கிட் பணயத்தொகை கோரிய வழக்கில் 48 மணி நேரத்திற்குள், ஒரு பெண் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார், பாதிக்கப்பட்டவரையும் போலிசார் மீட்டதாகக் கூறினார்.
நேற்று அதிகாலை 1.30 மணிக்கு பாதிக்கப்பட்டவரின் 46 வயது மனைவியிடமிருந்து போலிஸ்க்கு ஒரு புகார் வந்தது.
அதில், தனது கணவர் கடத்தப்பட்டதாகவும், சந்தேக நபர் பணயத்தொகை கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னரே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.
புக்கிட் அமான் போலிஸ் நிலையம், சிலாங்கூர் போலிஸ் நிலையத்தின் கூட்டு முயற்சியால் ஷாஆலம், ஐ-சிட்டி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியிலிருந்து பாதிக்கப்பட்டவர் 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் வெற்றிகரமாக மீட்கப்பட்டார்.
இந்த நடவடிக்கையில், விசாரணைக்கு உதவுவதற்காக 30 முதல் 46 வயதுக்குட்பட்ட ஐந்து ஆண்கள், ஒரு பெண்ணையும் போலிசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் 1961 ஆம் ஆண்டு கடத்தல் சட்டத்தின் பிரிவு 12-இன் கீழ் 10 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2026, 7:47 am
தமீம் தஹ்ரி போலிசில் சரணடைந்தார்
July 18, 2026, 7:57 pm
உயர் கல்வி கனவு நனவாகுவதற்கு முன்பே சாலை விபத்தில் லாவண்யாவின் உயிர் பிரிந்தது
July 18, 2026, 7:07 pm
