நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல்: 36 சட்டமன்ற தொகுதிகளில் 103 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்

சிரம்பான்- 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் 36 தொகுதிகளில் மொத்தம் 103 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ரம்லான் ஹருன் கூறினார். 

அனைத்து 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் பலப்பரீட்சை நடக்கவிருப்பதாகவும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் தங்களின் வேட்பாளர்களை மாநிலம் தழுவிய அளவில் களம் இறக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் அடிப்படையில்,  நம்பிக்கை கூட்டணி 36 வேட்பாளர்களையும், தேசிய முன்னணி 25 வேட்பாளர்களையும் போட்டியிடச் செய்துள்ளன.

தேசிய கூட்டணி 11 வேட்பாளர்களையும் பெர்சத்து கட்சி 24 வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளன. 

இம்முறை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள மொத்த வேட்பாளர்களில் 94 பேர் ஆண்கள் மற்றும் 9 பேர் பெண்கள் ஆவர்.

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் மொத்தம் 889,490 வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றவுள்ளனர். 

எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset