செய்திகள் மலேசியா
தேர்தலில் ஆதரவையும் வாக்குகளையும் யாராவது நிராகரிப்பார்களா?: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி
போர்ட்டிக்சன்:
தேர்தலில் ஆதரவையும் வாக்குகளையும் யாராவது நிராகரிப்பார்களா என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
ஜொகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடாத தொகுதிகளில் தேசிய முன்னணி ஆதரிப்போம் என பாஸ் கட்சி அறிவித்தது.
இதே நிலை தான் தற்போது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலிலும் தொடர்கிறது.
உடனே இந்த ஒத்துழைப்பு குறித்து பல்வேறு விதமாக பேசுகிறார்கள்.
என்னை பொறுத்தவரையில் தேர்தல் காலங்களில் அரசியல் ஒத்துழைப்பு எல்லாம் வழக்கமானதாகும்.
குறிப்பாக தேர்தல் நேரத்தில் வரும் ஆதரவையும் வாக்குகளையும் யாராவது நிராகரிப்பார்களா என்பது தான் என்னுடைய கேள்வியாகும்.
இதறகுஎ முதலில் அவர்கள் பதில் கூற வேண்டும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
நெகிரி மாநில தேர்தலில் மஇகா இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த தேர்தல் ஜொகூர் போன்று அல்ல. சவால்கள் நிறைந்தது.
ஆனால் இந்தியர்களும் மலாய்க்காரர்களும் இணைந்தால் அது நமக்கு வெற்றியை தரும்.
அந்த ஆதரவை பெற மஇகா தொடர் நடவடிக்கைகளை எடுக்கும்.
போர்ட்டிக்சன் மகளிர் சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குடும்ப போட்டி விளையாட்டை நிறைவு செய்து வைத்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2026, 7:57 pm
உயர் கல்வி கனவு நனவாகுவதற்கு முன்பே சாலை விபத்தில் லாவண்யாவின் உயிர் பிரிந்தது
July 18, 2026, 3:04 pm
10 ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்பு
July 18, 2026, 2:17 pm
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் மூன்று இந்தியர்கள் நேரடிப் போட்டி
July 18, 2026, 2:16 pm
