செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியின் செயல்பாடுகள் 16ஆவது பொதுத் தேர்தலின் ஒத்துழைப்பை தீர்மானிக்கும்: ஜாஹித்
ஜெம்புல்:
நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியின் செயல்பாடு 16ஆவது பொதுத் தேர்தலின் ஒத்துழைப்பை தீர்மானிக்கும்.
தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி, தேசியக் கூட்டணி இடையேயான கூட்டணியின் செயல்பாடு, வரவிருக்கும் தேர்தல்களில் இவ்விரு கூட்டணிகளின் போக்கைத் தீர்மானிக்கும்.
மலாக்கா மாநிலத் தேர்தல், 16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஒரு புதிய அரசியல் கூட்டணியும் இதில் அடங்கும்.
இருப்பினும், எதிர்காலத்தில் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து எந்தவொரு பரிசீலனையும் செய்வதற்கு முன்பு, நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் நிலவும் அரசியல் சூழலைத் தனது கட்சி முதலில் மதிப்பீடு செய்யும் என்று அவர் கூறினார்.
முதலில் நெகிரி செம்பிலானில் அவரது செயல்பாட்டைப் பார்ப்போம்.
ஏனென்றால் இந்த அரசியல் மிகவும் மாறும் தன்மை வாய்ந்தது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2026, 10:42 am
ஒருவரை கடத்தி 7 மில்லியன் ரிங்கிட் பணம் கோரப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது: டத்தோ குமார்
July 19, 2026, 7:47 am
தமீம் தஹ்ரி போலிசில் சரணடைந்தார்
July 18, 2026, 7:57 pm
உயர் கல்வி கனவு நனவாகுவதற்கு முன்பே சாலை விபத்தில் லாவண்யாவின் உயிர் பிரிந்தது
July 18, 2026, 7:07 pm
