நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 ஜொகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்பு

ஜொகூர் பாரு- 

ஜொகூர் மாநில அரசாங்கத்தில் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்று கொண்டனர். 

இன்று காலை இஸ்தானா புக்கிட் செரெனெவில்  நடைபெற்ற பதவியேற்பு சடங்கில் அவர்கள் அனைவரும் ஜொகூர் மாநிலத்தின் இடைக்கால ஆட்சியாளர், துங்கு மஹ்கோத்தா இஸ்மாயில் முன்னிலையில் பதவியேற்றனர். 

ஹைரி மட் ஷா (லார்கின்), ஜாஃப்னி ஷுகோர் (புக்கிட் பெர்மாய்), ஃபரேத் காலித் (செமேரா), லிங் தியான் சூன் (யோங் பெங்), லீ டிங் ஹான் (பலோஹ்) மற்றும் ஃபஸ்லி சாலே (புக்கிட் பாசிர்) புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வரிசையில் இடம்பெற்றனர் 

அவர்களுடன் நான்கு புதிய முகங்களான இஸ்ராக் அப்துல்லா, பெர்லிங் சட்டமன்ற உறுப்பினர் பி. பன்னீர் செல்வம், புலாய் செபாத்தாங் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்ருனிஸா ஹசான், மற்றும் நகிப் கஸாலி ஆகியோர் பதவியேற்றனர். 

இந்த பதவியேற்பு சடங்கில் ஜொகூர் மாநில மந்திரி பெசார், டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி மற்றும் ஜொகூர் மாநில செயலாளர் ரிடா அப்துல் கடீர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி 48 சட்டமன்ற இடங்களை வென்று புதிய மாநில அரசாங்கத்தை அமைத்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset