செய்திகள் மலேசியா
நீலாய் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முனை போட்டி
சிரம்பான்:
நீலாய் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெறுகிறது.
இந்த தொகுதியில் மட்டும் 5 பேர் போட்டியிடுகின்றனர்.
தேசிய முன்னணி சார்பில் லாய் சியான் கோங் போட்டியிருகிறார். நம்பிக்கை கூட்டணி சார்பில் அருள்குமார் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
பெர்சத்து கட்சியின் சார்பில் டத்தோ வீ. சரவணக்குமார் இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
மேலும் பெர்ஜாசா கட்சியின் சார்பில் ஷமானி இப்ராஹிமும் சுயேட்சையாக ஒமார் முகமட் இசாவும் போட்டியிடுகின்றனர்.
கடந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணியின் அருள்குமார் 10,899 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 19, 2026, 10:42 am
ஒருவரை கடத்தி 7 மில்லியன் ரிங்கிட் பணம் கோரப்பட்ட வழக்கில் ஆறு பேர் கைது: டத்தோ குமார்
July 19, 2026, 7:47 am
தமீம் தஹ்ரி போலிசில் சரணடைந்தார்
July 18, 2026, 7:57 pm
உயர் கல்வி கனவு நனவாகுவதற்கு முன்பே சாலை விபத்தில் லாவண்யாவின் உயிர் பிரிந்தது
July 18, 2026, 7:07 pm
