செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசியக் கூட்டணி அடைந்த தோல்வி சுயபரிசோதனைக்கான ஒரு களமாகப் பயன்படுத்த வேண்டும்: துவான் இப்ராஹிம்
ஜொகூர்பாரு:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசியக் கூட்டணி அடைந்த தோல்வி சுயபரிசோதனைக்கான ஒரு களமாகப் பயன்படுத்த வேண்டும்.
தேசியக் கூட்டணி துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் இதனை கூறினார்.
நேற்று நடந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை, சுயபரிசோதனைக்கான நேரமாக அனைவரும் கருத வேண்டும்.
மூன்று இடங்களைத் தக்கவைக்கத் தவறியது, குறிப்பாக அமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பு, நிர்வாகத்தின் வலிமை மற்றும் உட்கட்சி ஒற்றுமை ஆகியவற்றில் மேம்படுத்தப்பட வேண்டிய பலவீனங்கள் இருப்பதைக் காட்டுகிறது.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் அடுத்த தேர்தலுக்கான தயாரிப்புகள் மேலும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் திறம்பட்டதாகவும் இருக்கும் வகையில், ஒரு விரிவான தோல்விப் பகுப்பாய்வு நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.
ஜொகூர் தேர்தல் முடிந்துவிட்டது. மக்கள் தங்கள் முடிவை எடுத்துவிட்டனர்.
ஜொகூர் மாநிலத்தின் நிர்வாகத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டதற்காக தேசிய முன்னணிக்கு குறிப்பாக அம்னோவுக்கும் பாஸ் கட்சி வாழ்த்து தெரிவிக்கிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 27, 2026, 8:14 pm
அரச நிறுவனங்களை மதிப்பதுடன் 3ஆர் பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்: ஜாஹித்
July 27, 2026, 8:12 pm
முட்டைகள் வாங்கியபோது முகமூடி அணிந்த சந்தேக நபரால் சுடப்பட்டதில் ஆடவர் காயம்
July 27, 2026, 8:10 pm
ஒற்றுமையும் வேல் சக்தியும் இந்திய மாணவர்களின் கல்வி வெற்றிக்கு வழிகாட்டும்: சுரேன் கந்தா
July 27, 2026, 8:08 pm
