
செய்திகள் கலைகள்
கோல்டன் குளோப் 2022-வின் சிறந்த துணை நடிகருக்கான விருதை ஸ்குவிட் கேம் சீரீஸில் நடித்த ஓ யோங்-சு பெற்றார்
நியூயார்க்:
கடந்த 2021 செப்டம்பர் 17ஆம் தேதி தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஸ்குவிட் கேம்’ சீரீஸ் நெட்பிளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் பெறும் வரவேற்பைப் பெற்றது.
இதில் Player 001 என்ற மிக முக்கியமான துணை காதாப்பாத்திரத்தில் 77 வயதான நடிகர் ஓ யோங்-சு நடித்திருக்கிறார். இவர் தனது எதார்த்தமான நடிப்பால் பலரின் மனங்களிலும் நீங்கா இடம்பெற்றார்.
இவரின் இந்த திறமையை அங்கீகரிக்கும் வகையில் தற்போது கோல்டன் குளோப் 2022-வின் சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமான விருதாக கோல்டன் குளோப் கருதப்படுகிறது.
கோல்டன் குளோப் விருதை பெற்ற முதல் கொரியன் நடிகர் இவர் என்ற பெருமையையும் ஓ யோங்-சு பெற்றுள்ளார். சாதனைகள் படைப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என ஓ யோங்-சு நிரூபித்திருப்பதாக பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.
கோல்டன் குளோப் விருதுக்கான ’சிறந்த தொடர்’ பட்டியலில் ஸ்குவிட் கேம் சீரீஸ் இடம்பெற்றிருந்ததை அடுத்து, அந்த விருதை ’பெல்ஃபாஸ்ட்’ தொடர் வென்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
August 17, 2022, 7:52 pm
மாடியிலிருந்து குதித்தாரா?: மலேசிய பாடகர் எய்சன் சாய் மரணம்
August 8, 2022, 9:34 pm
உறவுகளின் மகத்துவத்தை விருமன் திரைப்படம் உணர்த்தும்! - நடிகர் கார்த்தி நம்பிக்கை
August 7, 2022, 5:47 pm
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அமெரிக்க பாடகி மேரி மில்பென், லிடியன் நாதஸ்லரம் இசை
August 2, 2022, 2:37 pm
மிரட்டல் எதிரொலி: சல்மான் கானுக்கு துப்பாக்கி உரிமம்
July 29, 2022, 4:06 pm
இசை நிகழ்ச்சியின் அரங்க மேடை மீதிருந்த பெருந்திரை விழுந்தது: இருவர் படுகாயம்
July 26, 2022, 4:51 pm
தமிழில் உறுதிமொழி கூறி எம்பியாக பதவியேற்றார் இளையராஜா
July 17, 2022, 2:12 pm