செய்திகள் மலேசியா
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தாய்லாந்து நாட்டு பிரதமர் அனுடினுடன் இருதரப்பு ஒத்துழைப்பு சந்திப்பை நடத்தினார்
புத்ராஜெயா-
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் தாய்லாந்து நாட்டு பிரதமரான அனுடின் சர்ன்விரகுல் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பு புத்ராஜெயாவின் பெர்டானா புத்ராவில் நிகழ்ந்தது.
மலேசியா- தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான கூட்டும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
மேலும், மலேசியா- தாய்லாந்து கூட்டாக இணைந்து வர்த்தகம், முதலீடு, எல்லை தொடர்பு, பாதுகாப்பு, வேளாண்மை, சுற்றுலா துறை, கல்வித்துறை ஆகிய துறைகளில் முழு கவனம் செலுத்த முனைப்பு காட்டுவதாக அவர் குறிப்பிட்டனர்.
2025-ஆம் ஆண்டில், தாய்லாந்து உலகளவில் மலேசியாவின் ஆறாவது பெரிய வர்த்தகப் பங்காளராகவும், ஆசியான் உறுப்பு நாடுகளில் இரண்டாவது பெரிய பங்காளராகவும் இருந்தது. இதன் மொத்த வர்த்தகம் RM118.57 பில்லியனை எட்டியது.
முன்னதாக, மலேசியா நாட்டிற்கு இரு நாட்கள் அதிகாரப்பூர்வ அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுலைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மகிழ்ச்சியோடு வரவேற்றார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
