செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
ஜொகூர் பாரு-
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் நாளை சனிக்கிழமை ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது
ஜொகூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 56 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
சுமார் 2.7 மில்லியன் தகுதிப்பெற்ற வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை மேற்கொள்ளவுள்ளனர்.
வாக்களிப்பு நடவடிக்கை சீராக நடைபெற 1140 வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தமாக 2.7 மில்லியன் வாக்காளர்களில் 13 லட்சத்து 64 ஆயிரத்து 763 பேர் ஆண்கள் என்றும் 13 லட்சத்து 63ஆயிரத்து 163 பேர் பெண்கள் என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டது.
ஜொகூர் மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பு ஜூலை 7ஆம் தேதி நடந்தது.
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை இரவு 10 மணிக்குத் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
