செய்திகள் மலேசியா
பினாங்கில் ‘Ops Kutip’, ‘Ops Sapu’ குடிநுழைவுத் துறை அதிரடி வேட்டை: 53 சட்டவிரோதக் குடியேறிகள் கைது
பினாங்கு:
பினாங்கில் குடிநுழைவுத் துறையினர் நேற்று நடத்திய ‘Ops Kutip’, ‘Ops Sapu’ ஆகிய அதிரடிச் சோதனைகளில், குழந்தைகள் உட்பட மொத்தம் 53 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனையில் 21 ஆண்களும் 32 பெண்களும் பிடிபட்டனர். இவர்களில் 5 முதல் 45 வயதுக்குட்பட்ட மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும் சிக்கினார்கள்.
பண்டார் பிராய் ஜெயாவின் பிளாக் டி2 (Block D2) குடியிருப்பு வளாகம் மற்றும் அங்குள்ள வணிகப் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேநேரம் ஜார்ஜ் டவுன், ஜாலான் மஸ்ஜித் நெகிரி (Jalan Masjid Negeri) பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 8 இந்தோனேசியப் பெண்கள் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக குடிநுழைவுத் தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் சட்டவிரோதக் குடியேறிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கவும் இத்தகைய கடுமையான சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்று பினாங்கு மாநில குடிநுழைவுத் துறை எச்சரித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
