நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநிலத் தேர்தல்; நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவைப் பெறும் உறுதியுடன், அன்வார் இன்று ஐந்து இடங்களில் சுற்றுப்பயணம்

ஜொகூர்பாரு:

நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவைப் பெறும் உறுதியுடன் அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இன்று ஐந்து இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கோள்கிறார்.

நாளை 16ஆவது ஜொகூர் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில்கூட்டணியின் வேட்பாளர்களுக்கு ஆதரவைப் பெறும் பொருட்டு, பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஐந்து முக்கிய இடங்களில் ஒரு பெரிய பிரச்சாரத்தைத்  நடத்துகிறார்.

இந்த ஆற்றல்மிக்க சுற்றுப்பயணத் தொடரின் மூலம், அவர் மாலை 3.50 மணிக்கு தாங்காக்கில் உள்ள புக்கிட் கம்பீரில் செந்துஹான் சஹாபத் மடானி நிகழ்ச்சியிலிருந்து தொடங்கி, மாலை 6 மணியளவில் கூலாயில் புக்கிட் பத்து நகருக்குச் செல்வதற்கு முன், பல மாநில சட்டமன்ற தொகுதிகளில் பயணம் செய்வார்.

இன்று இரவு பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில், பிரதமர் இரவு 8.15 மணிக்கு சிம்பாங் ரெங்காமில் நடைபெறும் லயாங்-லயாங்நிகழ்ச்சியின் மாபெரும் இறுதி நிகழ்விலும், அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு பெர்லிங் மால் மைதானத்தில் நடைபெறும் ஜொகூர் பாரு இசை விழாவிலும் கலந்துகொள்ள உள்ளார்.

இரவு 10.30 மணிக்கு பாசிர் குடாங்கில் நடைபெறும் ஹரப்பான் தேர்தல் ஜொகூர் நிகழ்ச்சியின் மாபெரும் இறுதி நிகழ்வுடன் பிரச்சாரம் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்



தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset