நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பந்திங் இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து சம்பவம் தொடர்பான வழக்கு: சந்தேக நபரின் மனநலத்தை பரிசோதனை செய்ய உத்தரவு 

பந்திங்- 

கோல லாங்காட் மாவட்டத்தின் பந்திங் பகுதியில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்தது 

இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேக நபர் மூன்றாம் படிவ மாணவி இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 

சம்பந்தப்பட்ட மாணவியை மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்று   மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி மஸ்லின்டா செலாமாட்  இன்று உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞர் முஹம்மத் அமிருல்  முன்வைத்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதன் பின்னர் இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார்.

15 வயதுடைய அந்த மாணவிக்கு எதிரான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டது.

எனினும், குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு அவரிடமிருந்து எந்தவித ஒப்புதல் வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

முன்னதாக, அந்த மாணவி காலை 8.33 மணியளவில் போலிஸ் வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சம்பவத்தின் தன்மை மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் வயதை கருத்தில் கொண்டு, மனநல பரிசோதனை முக்கியமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

மனநல காப்பகத்தில் மேற்கொள்ளப்படும் மனநல பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset