நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் 

ஜொகூர் பாரு- 

16வது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

56 சட்டமன்ற தொகுதிக்குத் தேர்தல் நடக்கும் நிலையில் மொத்தமாக 172 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

அவ்வகையில், தேசிய முன்னணி சார்பாக ம.இ.கா கட்சியிலிருந்து புக்கிட் பாத்து தொகுதியில் குமரன் இராமகிருஷ்ணன், பெர்லிங் தொகுதியில் பன்னீர் செல்வம், கெமெலா சட்டமன்றத்தில் ரவின் குமார் கிருஷ்ணசாமி மற்றும் கஹாங் சட்டமன்றத்தில் ருகேந்திரன் வெள்ளயன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

நம்பிக்கை கூட்டணி சார்பாக ஸ்கூடாயில் கார்த்தியாயினி ஜெயபாலன், பாலோ தொகுதியில் டாக்டர் ரூபன் ஆறுமுகம், புக்கிட் கெப்போங் தொகுதியில் மணி மற்றும் லாயாங் - லாயாங் தொகுதியில் குணா பாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் 

இந்நிலையில், தேசிய கூட்டணி சார்பாக எம்.ஐ.பி.பி கட்சி அதன் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.  கோத்தா இஸ்கண்டார் தொகுதியில் அன்ன பிரவீனா, புக்கிட் பெர்மாய் தொகுதியில் லினா மனோ, பாலோ தொகுதியில் ஜீவக்குமார், பெமானிஸ் தொகுதியில் டாக்டர் அரவிந்த், மற்றும் பெர்மாஸ் தொகுதியில் வேலா ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

ரஃபிசி ரம்லியின் பார்ட்டி பெர்சாமா கட்சி சார்பாக புத்திரி வங்சாவில் நிகோலஸ் பொல் வில்சன், புக்கிட் பாத்து தொகுதியில் தமிழி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset