செய்திகள் மலேசியா
வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக அவதூறான, போலிச் செய்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஃபஹ்மி
ஜொகூர்பாரு:
நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக, அவதூறான, தவறான தகவல்கள் பரவுவது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நம்பிக்கை கூட்டணி தகவல் தொடர்பு இயக்குனர் ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்கள் தங்களுக்குக் கிடைக்கும் எந்தவொரு தகவலின் நம்பகத்தன்மையையும் சரிபார்க்க வேண்டும்.
ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால் பிரதான ஊடகங்களை அணுக வேண்டும்.
நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.
வாக்குப்பதிவு நாளுக்கு முந்தைய மீதமுள்ள 24 மணி நேரத்தில், நாம் எல்லா விதமான அவதூறு செய்திகளையும், போலிச் செய்திகளையும், உண்மையல்லாத எல்லா விதமான விஷயங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.
அனைவரும் நம்பகமான மூலங்களிலிருந்து தகவல்களைப் பெறுவதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
