நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்

மூவார்:

தேசிய முன்னணி கூட்டணியை விட ஜசெகவுடன் நட்புறவு கொள்ளவே தாம் அதிகம் விரும்புவதாகக் கூறி, மசீசவுக்கு எதிராக ஒரு கிண்டலான கருத்தை நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

இங்குள்ள தாமான் பெலாங்கி இந்தாவில் சுமார் 1,000 வாக்காளர்களிடையே பேசிய அவர்,

மசீசாவை விட ஜசெக அதிக நேர்மையைக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

நான் ஜசெகவின் நண்பன் என்று மக்கள் சொல்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, தேசிய முன்னணியின் சீனக் கட்சியான மசீசாவை விட ஜசெக பாதுகாப்பானது, சிறந்தது, அதிக நேர்மை கொண்டது என்று கூட்டத்தினரின் கைதட்டல்களுக்கு மத்தியில் ஆற்றிய உரையில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset