செய்திகள் மலேசியா
தலைநகரில் FIFA உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவை கொண்டாடுவோம்: SORAK PIALA DUNIA@KL FESTIVAL PARK
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் பெஸ்டிவல் பார்க்கில் SORAK PIALA DUNIA@KL FESTIVAL PARK எனும் FIFA உலகக் கிண்ண ரசிகர் திருவிழா ஜூலை 14 முதல் 20ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.
மலேசியாவின் மிகப்பெரிய உலகக்கிண்ணம் ரசிகர்கள் கூடுமிடங்களில் ஒன்றாக அமையவுள்ளன. இந்த கால்பந்து திருவிழா, கால்பந்து ரசிகர்கள் குடும்பங்கள், சமூகங்கள், சுற்றுலா பயணிகள், முன்னணி வர்த்தக நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.
இந்நிகழ்வு விழா காலம் முழுவதும் 20,000க்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘Biggest Screen, Biggest Roars!!!’ என்ற கோஷத்துடன் நடைபெறும் இந்த உலகக்கிண்ண ரசிகர் விழாவில், 160 அடி × 40 அடி அளவிலான மிகப்பெரிய LED அகண்ட திரை அமைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜூலை 14 முதல் 20 வரை செவ்வாய்க்கிழமை முதல் திங்கட்கிழமை வரை நடைபெறும் இந்நிகழ்வில், போட்டி நாட்களில் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை ரசிகர்கள் போட்டிகளை கண்டு களிக்கலாம்.
மேலும், போட்டி இல்லாத நாட்களில் மாலை 6.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதுடன், Berjaya Corporation, Starbucks, U Mobile, 7-Eleven ஆகிய நிறுவனங்கள் இந்நிகழ்வை ஆதரிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், HotFM, FlyFM, KoolFM, Eight WuXian ஆகிய வானொலி நிலையங்கள் அதிகாரப்பூர்வ ஊடக கூட்டாளர்களாக இணைந்துள்ளதுடன், Gardenia, TikTokShop, Sugarbomb, Ajmal Perfume, Kahf உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
30-க்கும் மேற்பட்ட உணவு, பான விற்பனையாளர்கள், வான வேடிக்கை காட்சி, தீக்காட்சி, Mirage, DJ Dougie, CZA, Sharky, Pri2 உள்ளிட்ட முன்னணி DJ நிகழ்ச்சிகள், காற்பந்து சார்ந்த விளையாட்டுகள் மற்றும் பரிசளிப்புகள் ஆகியவை ரசிகர்களை மகிழ்விக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 11:01 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும்: ஹம்சா
July 9, 2026, 5:20 pm
ஜொகூர் தேர்தலுக்குப் பிறகு மூடா கட்சி தேசிய கூட்டணியுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லை
July 9, 2026, 4:46 pm
கூட்டாட்சிப் பிரதேச முஸ்லிம் அடக்கஸ்தலங்கள் தனியார்மயமாக்கப்படாது: ஜாவி அறிவிப்பு
July 9, 2026, 3:15 pm
