செய்திகள் மலேசியா
பத்துமலை முருகன் ஆலயம் அமைந்துள்ள தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்: அமிரூடின் ஷாரி
ஜொகூர்பாரு:
பத்துமலை முருகன் ஆலயம் அமைந்துள்ள தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசாரும், கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவருமான டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனை கூறினார்.
இந்த நாடு அனைத்து மலேசியர்களுக்கும் சொந்தமானது.
எல்லா இன மக்களும் அவரவர் சமய, கலாச்சார உரிமைகளுடன் தலைநிமிர்ந்து, சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்.
அதற்குத் தேவையான மனத்துணிவும் அரசியல் உறுதியும் கொண்ட பொறுப்பான அரசு நாட்டிற்கு அவசியம்.
அந்தக் கொள்கையை சிலாங்கூரில் மட்டுமன்றி நாடு முழுவதும் பக்காத்தான் ஹரப்பான் நடைமுறைப்படுத்தி வருகிறது. அதற்கு இன்றைய இந்திய கலாச்சார விழாவே சிறந்த முன்னுதாரணமாகும்.
மேலும் இன்று சில தரப்பினர் மக்களிடையே சந்தேகம், வேற்றுமை, அச்சம் ஆகியவற்றைத் தூண்டி சமூக ஒற்றுமையைச் சீர்குலைக்க முயல்கின்றனர்.
நான் அரசியலில் ஈடுபட்ட நாள் முதல் இந்தியச் சமூகத்துடன் நெருக்கமான உறவைப் பேணி வருகிறேன்.
அதிக இந்திய வாக்காளர்களைக் கொண்டதும், உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் ஆலயம் அமைந்துள்ள தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதிலும் பெருமை கொள்கிறேன்.
ஆரம்பக் காலத்தில் ஒரு இந்து அல்லாதவர் பத்துமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வந்தால் பத்துமலைக்கு ஆபத்து என்று சிலர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினர்.
ஆனால், கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறேன்.
இன்று பத்துமலையில் தைப்பூசத் திருவிழா முன்பைவிட மிகுந்த சிறப்புடனும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி சிலாங்கூர் மாநிலத்தில் அதிகமான ஆலயங்களுக்கு நில உரிமையும் ஆண்டு மானியமும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமய வளர்ச்சி மட்டுமல்லாமல், கல்வி, பொருளாதாரம், சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அதற்குத் தேவையான மானியங்களையும் ஊக்குவிப்புகளையும் எங்கள் அரசாங்கம் வழங்கி வருகிறது.
எங்கள் அரசாங்கத்தில் எந்தக் குறையும் இல்லை என்று நான் கூறவில்லை.
ஆனால், குறைகள் கண்டறியப்படும் போதெல்லாம் அவற்றை உடனுக்குடன் களைந்து, தவறுகளைத் திருத்திக்கொண்டு, அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடனும் நலமுடனும் வாழ தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
கெஅடிலான் மகளிர் அணி செயலாளர் சங்கீதா ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
