செய்திகள் மலேசியா
வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க ஜோகூருக்கு வர வேண்டும்: டிஏபி தலைவர் தியோ நீ சிங்
ஜோகூர் பாரு:
ஜோகூர் வாக்காளர்கள், குறிப்பாக மாநிலத்திற்கு வெளியே அல்லது வெளிநாடுகளில் வசிப்பவர்கள், இந்த சனிக்கிழமை நடைபெறும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிப்பதற்காகத் தாயகம் திரும்புவதன் மூலம் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று ஜோகூர் டிஏபி தலைவர் தியோ நீ சிங், வலியுறுத்தியுள்ளார்.
தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சராகவும் இருக்கும் தியோ, வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் தங்கள் வாக்குகள் தாயகம் சென்றடைவதை உறுதி செய்வதற்காக நேரத்தையும் பணத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.
ஜூலை 11-ஆம் தேதிக்கு முன்னர் தபால் வாக்குச்சீட்டை விநியோகம் செய்ய கூரியர் சேவைகளால் உத்தரவாதம் அளிக்க முடியாததால், தனது தபால் வாக்குச்சீட்டை மலேசியாவிற்கு நேரில் கொண்டு வந்து சேர்க்க ஒருவரைத் தேடி விமான நிலையத்திற்குச் சென்ற ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு வாக்காளரின் கதை உட்பட, பல நெகிழ்ச்சியான கதைகளை அவர் பகிர்ந்து கொண்டார்.
மேலும், சீனாவில் உள்ள ஒரு முதுகலை மாணவர், வாக்களிப்பதற்காகத் தாயகம் திரும்புவதற்கு RM1,000-க்கும் அதிகமான கூடுதல் செலவில் விமான டிக்கெட்டை மாற்றியதையும், அமெரிக்காவில் உள்ள ஒரு வாக்காளர் தபால் வாக்குப்பதிவு செயல்முறை நிறைவடைவதைக் காண ஒரு மலேசியக் குடிமகனைக் கண்டுபிடிக்கக் கடுமையாக உழைத்ததையும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கதைகள் அனைத்தும் என் மனதை ஆழமாகத் தொட்டன. என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
