செய்திகள் மலேசியா
ஜொகூர் மாநில தேர்தல் பரப்புரை தொடர்பாக 73 போலிஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன
ஜொகூர் பாரு-
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரைகள் நாளையோடு நிறைவடைகின்றன.
ஜொகூர் மாநில தேர்தல் பரப்புரை காரணமாக கடந்த ஜூன் 27ஆம் தேதி முதல் சுமார் 73 போலிஸ் புகார்கள் பெறப்பட்டதாக ஜொகூர் மாநில போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஷாட் கூறினார்.
ஒட்டுமொத்த போலிஸ் புகார்களில் 22 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கில், பகைமையைத் தூண்டுதல், அவதூறு, இணைய வசதிகளை முறையற்ற வகையில் பயன்படுத்துதல் மற்றும் துரோகம் ஆகிய குற்றங்கள் அடங்கியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
அரசியல் பேச்சு மற்றும் பிரச்சார அனுமதிகளுக்காக பெறப்பட்ட 4,368 விண்ணப்பங்களில் 4,053 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் ஜூலை 11ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மொத்தம் 56 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுவதாக மலேசியத் தேர்தல் ஆணையம் இதற்கு முன் தெரிவித்திருந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
