செய்திகள் மலேசியா
1 எம்டிபி தொடர்பான 42.5 பில்லியன் ரிங்கிட் கடனை அரசாங்கம் செலுத்தியுள்ளது: துணை நிதியமைச்சர்
கோலாலம்பூர்:
கடந்த ஜூன் 30 நிலவரப்படி 1 எம்டிபி நிறுவனத்தின் அசல், வட்டி, சட்ட, செயல்பாட்டுச் செலவுகள் உட்பட 42.5 பில்லியன் ரிங்கிட் கடனையும் அரசாங்கம் செலுத்தியுள்ளது.
அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட, மொத்தம் 8.9 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுகுக் இஸ்லாமிய நடுத்தர காலப் பத்திரத்திற்கும் அரசாங்கம் இன்னும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது என்று துணை நிதியமைச்சர் லியூ சின் டோங் கூறினார்.
இந்த சுகுக் 5 பில்லியன் ரிங்கிட் அசலையும் 3.9 பில்லியன் வட்டியையும் உள்ளடக்கியது. இது 2039-ல் முதிர்வடையும் என்று அவர் கூறினார்.
இதுவரை, 1 எம்டிபி தொடர்பான நிதிகளில் மொத்தம் 31.3 பில்லியன் ரிங்கிட் தொகையை அரசாங்கம் வெற்றிகரமாக மீட்டுள்ளது.
எதிர்காலத்தில் மேலும் நிதிகள் திருப்பித் தரப்படாவிட்டால், மொத்தக் கடன்களில் மீதமுள்ள 20.1 பில்லியன் ரிங்கிட் தொகையை அரசாங்கம் ஏற்க வேண்டியிருக்கும்.
மீட்கப்பட்ட நிதிகள், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட சொத்துக்கள் மட்டுமின்றி, அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு செலுத்தப்பட்ட 1 எம்டிபி கடன்களின் மொத்தத் தொகை குறித்து ஸ்தம்பின் நாடாளுமன்ற உறுப்பின சோங் சியெங் ஜென் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
1 எம்டிபி தொடர்பான சொத்துக்களை மீட்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த சின் டோங், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில்,
டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கிற்கு எதிரான குற்றவியல், உரிமையியல் வழக்குகள், அத்துடன் 1 எம்டிபி நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதில் ஈடுபட்ட பல பெயர்கள், பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு எதிரான உரிமையியல் வழக்குகளும் அடங்கும் என்று கூறினார்.
25 பணச்சலவை குற்றங்கள், தனது பதவியைப் பயன்படுத்தி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட பின்னர், 2025 டிசம்பர் 25ஆம் தேதி உயர் நீதிமன்றம் நஜிப்பிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்ததாக அவர் விளக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
