செய்திகள் மலேசியா
ஜொகூர் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனை; திரளான மக்கள் கலந்துக் கொண்டனர்: குணராஜ்
குளுவாங்:
ஜொகூர் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற சிறப்புப் பிரார்த்தனை விமரிசையாக நடைபெற்றது.
செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் கெஅடிலான் உச்சமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் கூறினார்.
குளுவாங்கி உள்ள ஸ்ரீ வேல் முருகா ஆலயத்தில் ஜொகூர் தேர்தலில் போட்டியிடும் அனைத்து நம்பிக்கை கூட்டணி வேட்பாளர்களின் நல்வாழ்வு, வலிமை, வெற்றிக்காக சிறப்புப் பிரார்த்தனைகளைச் செய்யும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
உள்ளூர் சமூகத்தினர் எங்களுடன் பிரார்த்தனையில் இணைந்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருந்தது.
இது ஒற்றுமை, நல்லிணக்கம், ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் உணர்வைப் பிரதிபலித்தது.
ஆலயத் தலைவர் கணேசன், ஆலய குழுவினருக்கு அவர்களின் அன்பான உபசரிப்பிற்கும், சிறப்புப் பிரார்த்தனைகளை ஏற்பாடு செய்ததற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பிரார்த்தனைகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் டாக்டர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பிரார்த்தனைகள், நேர்மை, பணிவு, அர்ப்பணிப்புடன் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதற்கான நமது உறுதியை வலுப்படுத்தட்டும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜொகூர், மலேசியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம் என்று குணராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 11:47 pm
நெகிரி செம்பிலானில் நம்பிக்கை கூட்டணி சார்பில் 5 இந்தியர்கள் போட்டி
July 14, 2026, 5:13 pm
நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த சட்டத் திருத்தம்: மலாக்கா அரசிலிருந்து ஜசெக விலகியது
July 14, 2026, 3:48 pm
மலாக்கா மாநில அரசாங்கத்திலிருந்து DAP கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது
July 14, 2026, 1:13 pm
சிலாங்கூர் மாநிலத்தில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கு நிலப்பட்டா: பாப்பா ராய்டு வழங்கினார்
July 14, 2026, 11:42 am
