செய்திகள் மலேசியா
கைரி வேட்பாளரா இல்லையா என்பது குறித்து தெரிய அடுத்த வாரம் வரை காத்திருங்கள்: ஜலாலுடின்
சிரம்பான்:
முன்னாள் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் கைரி ஜமாலுடின் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் நெகிரி செம்பிலானில் மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளராகப் பட்டியலிடப்பட்டுள்ளாரா என்பது அடுத்த வாரம் தெரியவரும்.
இந்தக் கேள்விக்கு நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ ஜலாலுடின் அலியாஸ் இவ்வாறு பதிலளித்தார்.
காத்திருங்கள், அவர் வேட்பாளராகப் பட்டியலிடப்பட்டுள்ளாரா இல்லையா என்பதைப் பின்னர் பார்ப்போம் என்று கூறிய அவர்,
வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், தேசிய முன்னணி வேட்பாளர் குறித்த அறிவிப்பு அடுத்த புதன்கிழமை வெளியிடப்படும் என்றும் அவர் விளக்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களாகத் தகுதிபெற்ற பெயர்ப் பட்டியலில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் பலங்களும் சாதகங்களும் உள்ளன.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்பதாக டத்தோஶ்ரீ ஜலாலுடின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
