செய்திகள் மலேசியா
அர்ஜெண்டினா, எகிப்து இடையிலான ஆட்ட முடிவால் ரசிகர்களிடையே மோதல்: ஜொகூரில் உள்ள நாசி கண்டார் உணவகத்தில் பரபரப்பு
ஜொகூர்பாரு:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினா, எகிப்து இடையிலான ஆட்ட முடிவால் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இச்சம்பவம் ஜொகூரில் உள்ள நாசி கண்டார் உணவகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜொகூர் தாமான் யூனிவர் சிட்டியில் உள்ள நாசி கண்டார் உணவகத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து உணவக ஊழியர் கூறியதாவது,
இங்கு 10 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். இதுதான் முதல் சம்பவம்.
அதிகாலை உலகக் கிண்ண போட்டியின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த பல நபர்கள் நாற்காலிகளை வீசியெறிந்தனர்.
அர்ஜெண்டினா, எகிப்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது எதிர்பாராத விதமாகவும், உணவகத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டும் நடந்த இந்தச் சம்பவத்தால், பொருட்களுக்குப் பெரிய சேதமோ அல்லது குறிப்பிடத்தக்க இழப்புகளோ ஏற்படவில்லை.
மேலும் ஊழியர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், ஒரு கார் சேதமடைந்ததாகத் தெரிகிறது.
ஆனால் அந்த வாகனம் இந்த உணவகத்தின் வாடிக்கையாளருக்குச் சொந்தமானதா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
இந்தச் சம்பவம் உணவகத்தின் சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது. அது அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
