செய்திகள் மலேசியா
கிளாந்தானில் டிஸ்கோ ரெட்ரோ கருப்பொருளில் இசைநிகழ்ச்சியா? மாநில அரசு விசாரணை
கோத்தா பாரு-
கிளந்தான் மாநிலத்தில் டிஸ்கோ ரெட்ரோ கருப்பொருள் கொண்டும் 1960ஆம் 70ஆம் மற்றும் 80ஆம் ஆண்டுகளின் ஹிப்பி பொழுதுபோக்கு இசைநிகழ்ச்சி குறித்து முறையான உரிமம் இல்லாத வகையில் மாநில அரசாங்கம் விசாரணை நடத்துகிறது
உள்ளாட்சி, வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் செயற்குழு உறுப்பினர் ஹில்மி அப்துல்லா கூறுகையில், கிளந்தான் ஆற்றங்கரையில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக நம்பப்படுவதாகவும், அது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து கோத்தா பாரு மாநகராட்சி மன்றத்திற்கு (MPKB) புகார்கள் வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கவும் தமது தரப்பு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது
இந்த இசை நிகழ்ச்சியானது 2003ஆம் ஆண்டு பொழுதுபோக்கு கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் சட்டத்தை முறையாக பின்பற்றவில்லை என்று அவர் எடுத்துரைத்தார்
MPKB வர்த்தகம், வணிகம் மற்றும் தொழில்துறை உரிம துணை விதிகள் 2019-இன் கீழ் உள்ள நிபந்தனைகளை மீறினால், வளாக உரிமையாளரின் வணிக உரிமமும் ரத்து செய்யப்படலாம்.
முன்னதாக, இந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்தும் ஒரு சுவரொட்டி முகநூலில் வைரலாகப் பரவி, பல்வேறு எதிர்வினைகளைத் தூண்டியதுடன், மக்கள் அதிகாரிகளை உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
