செய்திகள் மலேசியா
அடிப்படை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மக்களுக்கு இருக்க வேண்டும்: டாக்டர் சத்தியபிரகாஷ்
ஜொகூர்பாரு:
அடிப்படை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் மக்களுக்கு இருக்க வேண்டும்.
சிலாங்கூர் கெஅடிலான் தேர்தல் இயக்குநர் டாக்டர் என். சத்தியபிரகாஷ் இதனை கூறினார்.
அரசு மருத்துவமனைகளை முழுமையாகச் சார்ந்திருக்காமல், பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு தனியார் மருத்துவமனையிலும் குடிமக்கள் முதன்மை சுகாதாரப் பராமரிப்பைப் பெற அனுமதிக்கும் ஒரு முறையை நம்பிக்கை கூட்டணி முன்மொழிகிறது.
அதிக செலவுகளையும் நீண்ட செயலாக்கக் காலத்தையும் கோரும் புதிய மருத்துவமனைகளைக் கட்டுவதை விட இந்த அணுகுமுறை மிகவும் நடைமுறைக்கு உகந்தது.
மருத்துவமனை ஏற்கனவே அங்கே இருக்கிறது. மருத்துவர் ஏற்கனவே அங்கே இருக்கிறார். உபகரணங்களும் கிடைக்கின்றன.
தகுதியுள்ள மக்களுக்கான சிகிச்சைச் செலவை மட்டும் அரசாங்கம் ஏற்றால் போதும்.
ஒரு புதிய மருத்துவமனை அல்லது கிளினிக்கைக் கட்டுவதை விட இது மிகவும் மலிவானது.
நேற்று ஜொகூர் தெப்ராப்வில் நடைபெற்ற ஒரு மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சத்தியபிரகாஷ் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 5:37 pm
ஜொகூர் மாநில மந்திரி புசாராக டத்தோ ஓன் ஹபிஸ் காஸி பதவியேற்றார்
July 12, 2026, 2:25 pm
ங்கா கோர் மிங் தனது ராஜினாமா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: கைரி
July 12, 2026, 2:24 pm
நஜிப் விடுதலையானால் தான் நான் ராஜினாமா செய்வேன்; தேசிய முன்னணியின் வெற்றியால் அல்ல: ங்கா
July 12, 2026, 1:53 pm
ஜாஹித் ஹமிடி, ஓன் ஹபிஸ் ஆகியோர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தனர்
July 12, 2026, 12:12 pm
ஜோகூர் தேர்தல்: 55 வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்
July 12, 2026, 10:41 am
