செய்திகள் மலேசியா
காவல்துறை அதிகாரியை மோதிய சம்பவம்: இரு மாணவர்கள் போலீசாரால் கைது
சிரம்பான்-
போலீஸ் அதிகாரி ஒருவரை மோதிவிட்டு தப்பியோட முயன்ற இரண்டு பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்
இந்த சம்பவம் நெகிரி செம்பிலான், தாமான் பஞ்சோர் ஜெயாவில் நடைபெற்ற 'ஓப்ஸ் சாம்செங் ஜாலான்' வீதிச் சோதனை நடவடிக்கையின் போது நிகழ்ந்தது.
நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமது கூறுகையில், நேற்று மாலை சுமார் 6.45 மணியளவில் ஹோண்டா EX5 ரக மோட்டார் சைக்கிளில் வந்த 14 மற்றும் 15 வயதுடைய அந்த இரு பதின்ம வயது இளைஞர்களும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
சோதனைச் சாவடியிலிருந்து தப்பி ஓட முயன்ற அந்த இரு இளைஞர்களும் ஆக்ரோஷமாக செயல்பட்டு போலீஸ் அதிகாரி ஒருவரை மோதியதில், அந்த அதிகாரிக்கு தலை, வலது மணிக்கட்டு, வலது கை மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அந்த போலீஸ் அதிகாரி துவாங்கு ஜாஃபர் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற பின்னர், அவருக்கு பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டு வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என முடிவு வந்த வேளையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 14 வயது சிறுவன் நாளை வரை இரண்டு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-இன் பிரிவு 42(1), மற்றும் குற்றவியல் சட்டத்தொகுப்பின் பிரிவு 186, பிரிவு 332 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும்: ஹம்சா
July 9, 2026, 5:20 pm
