நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபியை அரசியல் ஆயுதமாக்குவதை நிறுத்துங்கள்; ஜொகூர் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லுங்கள்: டத்தோ சிவராஜ்

ஜொகூர்பாரு:

தேர்தல் காலங்களில் 1 எம்டிபியை அரசியல் ஆயுதமாக்குவதை நிறுத்துங்கள்.

ஜொகூர் மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் கூறினார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தற்போது சிறையில் இருக்கும் நிலையில் நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் தொடர்ந்து 1 எம்டிபி விவகாரத்தை ஜொகூர் மாநிலத் தேர்தலுடன் இணைத்துப் பேசுவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

2018 முதல் ஆட்சியிலும், 2022 முதல் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பிரதமராகவும் இருக்கிறார்.

ஆனால் நீங்கள் ஜொகூர் மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்பதையே தேர்தல் களத்தில் எடுத்துரைக்க வேண்டும்.

அதைவிடுத்து, கடந்த கால விவகாரங்களையே மீண்டும் மீண்டும் பேசுவது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் அரசியலாகவே பார்க்கப்படுகிறது.

மத்திய அரசை அமைக்க தேசிய முன்னணி ஆதரவை நாடியபோது உங்கள் அரசியல் ஒழுக்கமும் மனசாட்சியும் எங்கே சென்றது?

1 எம்டிபி குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நீங்கள், அதன் முழுமையான அறிக்கையையும் நிதி விவரங்களையும் உண்மையாக ஆய்வு செய்துள்ளீர்களா? 1 எம்டிபியின் நிகர லாபம் தொடர்பான தகவல்களைப் பார்த்துள்ளீர்களா?

கடந்த மூன்று ஆண்டுகளில் 1 எம்டிபியை விட பெரிய பல சர்ச்சைகளும் பிரச்சினைகளும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன என்பதையும் மக்கள் மறந்துவிடவில்லை.

எனவே ஜொகூர் மக்களை அச்சுறுத்தும் பழைய விவகாரங்களை அல்ல,

அவர்களின் எதிர்கால நலனுக்கான உங்கள் திட்டங்களையும் சாதனைகளையும் முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ளுமாறு நான் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று டத்தோ சிவராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset