நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் மாநில சட்டமன்ற பொதுத்தேர்தல்: லஞ்சம் தொடர்பாக மூன்று புகார்களை எம்.ஏ.சி.சி பெற்றது

புத்ராஜெயா - 

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி லஞ்சம் தொடர்பாக மூன்று புகார்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பெற்றதாக எம்.ஏ.சி.சியின் தலைமை ஆணையர் டத்தோஶ்ரீ அப்துல் ஹலிம் அமான் கூறினார். 

பத்து பஹாட்டில் உள்ள தேர்தல் பிரச்சார அமலாக்கக் குழுவிடமிருந்து (PP-KPR) ஒரு புகார் வந்துள்ளது, மற்ற இரண்டும் பொதுவான தகவல்கள் ஆகும்.

நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு இணங்க அனைத்து தகவல்களும் மதிப்பீடு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் லஞ்ச நடவடிக்கைகளைத் துடைத்தொழிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை அறையை ஜொகூர் மாநிலத்தில் முடுக்கிவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

ஜனநாயக செயல்முறையின் நேர்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும், பின்னணி பேதமின்றி தேர்தல் ஊழலில் ஈடுபடும் எந்தவொரு கட்சி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஊழல் தடுப்பு ஆணையம்  வலியுறுத்துகிறது.

16ஆவது ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. 2.7 மில்லியன் ஜொகூர் மாநில மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றவுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset