நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் பாரு பேருந்து நிலையத்தில் கைகலப்பு சம்பவம்; சம்பந்தப்பட்ட  ஆடவர்களைப் போலீஸ் தேடுகிறது 

ஜொகூர் பாரு-

ஜொகூர் பாரு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீஸ் தேடி வருகிறது 

இரு ஆடவர்கள் ஒரு நபரை தாக்கிய சம்பவம் அடங்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து ஜொகூர் பாரு மாவட்ட காவல்துறை தரப்பு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 

இந்த கைகலப்பு தொடர்பாக நேற்று முன்தினம் காவல்துறை தரப்புக்கு மாலை 4.30 மணிக்கு போலீஸ் புகார் ஒன்று கிடைத்ததாக துணை கமிஷ்னர் அஸ்ருல் ஹிஷாம் கூறினார். 

கைகலப்பு சம்பவத்திற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றும் சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸ் தேடி வருவதாக அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக சொன்னார். 

இந்த சம்பவம் குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 160-யின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என்றார். 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறை, ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். 

கைகலப்பு சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் ஜொகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு 07-2182323 என்ற எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset