செய்திகள் மலேசியா
தமிழகத்தில் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா விருது
நாமக்கல்:
கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா உலகெங்கும் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் மலேசியாவில் கவியரசு கண்ணதாசனுக்கு விழா எடுத்து சிறப்பிப்பதில் மலேசிய இந்தியர் காங்கிரஸ் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் நிகரற்றவராக திகழ்கிறார். தமிழகத்தில் இருந்து பல அறிஞர்களைத்தருவித்து விழா எடுத்து வருகிறார்.
டத்தோஸ்ரீ சரவணன் அவர்கள் நாமக்கல்லில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு விழா விருதினைப் பெற்றுக்கொண்டு, சிறப்புரையோடு ஏற்புரையும் ஆற்றினார்.
இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் அரசு பரமேஸ்வரன், திரு. பசுமை சத்தியமூர்த்தி, மருத்துவர் குழந்தைவேலு, காந்தி கண்ணதாசன், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், வி.பி. குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும்: ஹம்சா
July 9, 2026, 5:20 pm
