நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த முறை சீன வாக்காளர்களின் அலை தேசிய முன்னணி பக்கம் உள்ளது: ஜாஹித்

தங்காக்:

இந்த முறை சீன வாக்காளர்களின் அலை தேசிய முன்னணி பக்கம் உள்ளது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

இந்த முறை ஜொகூர் மாநிலத் தேர்தலில் தேசிய முன்னணி கூட்டணிக்கு சீன வாக்காளர்களின் ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் மஇகா, மசீச வேட்பாளர்களுக்கு வெற்றிபெற வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்ட வாக்கு மையம், வாக்குப்பதிவு வழிகளிலும் வாக்காளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தேசிய முன்னணி நடத்திய ஆய்வின்படி இந்தக் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன.

ஆய்வுகளின் அடிப்படையில் அதிக சீன வாக்காளர்கள் உள்ள பகுதிகளில் நாங்கள் எதிர்பாராத வேட்பாளர்களை நிறுத்தினோம்.

ஆனால், அவர்கள் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​இதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதை அவர்கள் கண்டனர்.

எனவே, அடையாளம் காணப்பட்ட 19 பகுதிகளில் அம்னோ அல்லாத வேட்பாளர்களான மசீச, மஇகா வேட்பாளர்களுக்கும் நம்பிக்கை அளித்து, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க இதுவே சரியான நேரம் என்று அவர்கள் என்னிடம் கூறியதாக ஜாஹித் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset