செய்திகள் மலேசியா
டுரியான் விலை வீழ்ச்சி; சீனாவுடனான சந்தை விரிவாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்: பிரதமர்
ஜொகூர்பாரு:
டுரியான் விலை வீழ்ச்சியை தொடர்ந்து சீனாவுடனான சந்தை விரிவாக்கம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
தீபகற்ப மலேசியாவில் ஏறக்குறைய ஒரே நேரத்தில் நிகழ்ந்த பழங்களின் ராஜாவான டுரியான் பருவத்தைத் தொடர்ந்து, விலை வீழ்ச்சியை சந்திக்கும் டுரியன் விவசாயிகளின் அவலநிலை கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனால் அடுத்த மாதம் சீனப் பிரதமர் லி கியாங்குடன் இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வருவதாக உறுதியளிக்கிறேன்.
சீனாவுடனான மலேசியாவின் துரியன் சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறிவதே இந்த முயற்சியின் நோக்கம்.
இதன் மூலம் தேவையை அதிகரிக்கவும், தற்போது விவசாயிகளின் வருமானத்தைப் பாதிக்கும் விலைகளை நிலைப்படுத்தவும் உதவுவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
சநான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். சீனாவின் பிரதமர் எனது நல்ல நண்பர்.
நான் அடுத்த மாதம் சீனா செல்கிறேன்.
அங்கு டுரியான் பழங்களின் விலை குறைந்து வருவதைக் காண்கிறேன், அதனால் அவற்றைக் கொண்டு வர விரும்புகிறேன்.
சீனாவின் தரநிலைகள் மிகவும் உயர்ந்தவை, மிக உயர்ந்தவை, ஆனாலும் நான் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும்: ஹம்சா
July 9, 2026, 5:20 pm
