செய்திகள் மலேசியா
நிதி விண்ணப்பங்களுக்கு ஆதரவுக் கடிதங்களா; குஸ்கோப் சகித்துக் கொள்ளாது: ஸ்டீவன் சிம்
பாசிர் கூடாங்:
நிதி விண்ணப்பங்களுக்கு ஆதரவுக் கடிதங்கள் வழங்கப்படும் விவகாரங்களை குஸ்கோப் சகித்துக் கொள்ளாது.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் (குஸ்கோப்) ஸ்டீவன் சிம் இவ்வாறு எச்சரித்துள்ளார்.
தனது கீழ் வரும் தொழில்முனைவோர் நிதி விண்ணப்பங்களுக்கான எந்தவொரு ஆதரவு கடிதம், உள்நபர் நடைமுறைகள் குறித்தும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை.
அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து நிதிகளும் மற்றும் வணிகக் கடன் உதவிகளும், எந்தவொரு அரசியல் ஆதரவும் இன்றி, தகுதியுள்ள மலேசியர்களின் முழுமையான உரிமையாகும்.
அரசியல் ஆதரவுக் கடிதங்கள் தேவை என்ற நிபந்தனையையோ அல்லது நிதியுதவிகளை அங்கீகரிக்க மூன்றாம் தரப்பினர் தலையிடுவதையோ முற்றிலுமாக நீக்குவதில் அமைச்சகம் இப்போது முழுமையாக உறுதி கொண்டுள்ளது.
இனி நீங்கள் வணிகத்திற்காக நிதி, கடன் வாங்க விரும்பினால், உங்களுக்கு இனி ஒரு துறைத் தலைவரின் கையொப்பமோ, ஒரு அரசியல்வாதியின் கையொப்பமோ தேவையில்லை.
அல்லது ஒரு சிபாரிசை யன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
நாங்கள் இதை அனைத்து மலேசியர்களுக்கும் நேரடியாகத் திறந்து விடுகிறோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் வவாசான் நெகாரா கட்சி போட்டியிடும்: ஹம்சா
July 9, 2026, 5:20 pm
