செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் பாட நிலைய கூரை சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் பாட நிலையம் ஒன்றின் கூரை சரிந்து விழுந்ததில் 14 பேர் மாண்டனர்.
அவர்கள் அனைவரும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த 4 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட பிள்ளைகள்.
லாகூர் நகரில் நடந்த சம்பவத்தில் மேலும் ஐவர் காயமுற்றனர்.
ஊழியர்கள் ஓடுகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது கூரை இடிந்து விழுந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

துணைப்பாட நிலையம் ஓர் ஆசிரியரின் வீட்டில் அமைந்திருந்ததாகப் பஞ்சாப் கல்வி அமைச்சர் கூறினார்.
அந்த ஆசிரியர் வசதிகுறைந்த பிள்ளைகளுக்குக் கல்வி கற்றுக்கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் (Shehbaz Sharif) அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
