செய்திகள் உலகம்
தாய்லாந்து சந்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி, அறுவர் காயம்
பெங்கொக்:
தாய்லாந்தில் உள்ள நகோன் ரட்சசிமா மாகாணத்தில் நடைபெற்ற வர்த்தக நிகழ்வில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் ஒருவர் பலியான வேளையில் அறுவர் காயமடைந்ததாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் புதன்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்வு முடிவடையும் தருவாயில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கைவினைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி வியாபாரிகளையும் வருகையாளர்களையும் தாக்கியதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர் பிரகோப் பாடின் தெரிவித்தார்.
சந்தேக நபர் நிகழ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை திருட முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் மீது துப்பாக்கியைப் பயன்படுத்தி கொலை முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்படவுள்ளது.
அத்துடன் தலைமறைவாக உள்ள மற்ற சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
