செய்திகள் உலகம்
இந்தோனேசியாவின் ப்ளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்: மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
கோலாலம்பூர்:
இந்தோனேசியாவின் கிழக்கு நுசா டெங்காரா மாகாணத்தில் உள்ள ப்ளோரஸ் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த இயற்கை இடர்பாட்டில் இதுவரை எந்த மலேசியப் பிரஜைகளும் பாதிக்கப்படவில்லை என்று ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மற்றும் சுற்றுலா சென்ற மலேசியர்களின் நிலை குறித்து தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
மேலும், இந்தச் சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியுள்ள இருவரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து மலேசியத் தூதரகம் நிலவரம் குறித்த உடனடித் தகவல்களைத் தொடர்ந்து சேகரித்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் அவசர உதவி அல்லது தூதரக உதவிகளைப் பெற உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, மலேசியர்கள் +62 813 8081 3036 என்ற தொலைபேசி எண் மூலமாகவும் அல்லது mwjakarta@kln.gov.my என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
