செய்திகள் உலகம்
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் பதவியிலிருந்து கரோலின் லீவிட் விலகுகிறார்
வாஷிங்டன்:
வாஷிங்டனில் வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளராகப் பணியாற்றி வரும் கரோலின் லீவிட் இந்த மாத இறுதியில் தனது பதவியிலிருந்து விலகவுள்ளார்.
எனினும், அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த ஆலோசகராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்புகளில் தனது காரசாரமான மற்றும் உறுதியான பேச்சுகளுக்காக அவர் பரவலாகக் கவனிக்கப்பட்டார்.
தனது இளம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடுவதற்காக லீவிட் விலகுவதாக டிரம்ப் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் லீவிட், விவியானா என்ற தனது இரண்டாவது பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
அப்போது ஏற்பட்ட சில அசம்பாவிதச் சம்பவங்களைத் தொடர்ந்து, தனது மகப்பேறு விடுமுறையைச் சிறிது காலம் தள்ளிவைத்துவிட்டு அவர் உடனடியாகப் பணிக்குத் திரும்பியிருந்தார்.
வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக டிரம்பிற்கான மக்கள் ஆதரவு சரிந்து வரும் சூழலில் இந்த விலகல் முடிவு வந்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
