செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியாவில் 3 முறை விமானங்கள் மோதல் சம்பவங்கள்: பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி விசாரணைக்கு உத்தரவு
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இரண்டு வாரத்தில் மூன்று முறை விமானங்கள் மோதவிருந்த சம்பவங்கள் பற்றி விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.
அவற்றில் இரண்டு சம்பவங்கள் ஒரே நாளில் நடந்தன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை Virgin Australia விமானம் புறப்பட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அப்போது Qantas விமானம் அதன் ஓடுபாதையைக் கடப்பதை விமானிகள் கவனித்தனர்.
உடனடியாக விமானத்தை நிறுத்தியதால் மோதல் தவிர்க்கப்பட்டது.
அதே நாளில் Jetstar விமானி திடீரென விமானத்தை நிறுத்தி Qatar Airways விமானத்துடன் மோதுவதைத் தவிர்த்தார்.
அதற்குமுன் ஜூலை 27ஆம் தேதி இரண்டு Qantas விமானங்கள் மோதவிருந்தன.
மூன்று சம்பவங்களும் நடந்திருக்கக் கூடாதவை என்று ஆஸ்திரேலியப் போக்குவரத்துப் பாதுகாப்புப் பிரிவு கூறியது.
விமான நிலையத்தின் பணிச்சுமை, கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை, பயிற்சி நடைமுறைகள் ஆகியவை விசாரணையில் ஆராயப்படும்.
பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி (Anthony Albanese) முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
ஆதாரம் : AFP
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
