செய்திகள் உலகம்
ஈரான் நாட்டு அச்சுறுத்தல் காரணமாக துருக்கியிலிருந்து ரகசிய இராணுவ விமானத்தில் பயணம் செய்த டொனால்டு டிரம்ப்
வாஷிங்டன்:
ஈரான் நாட்டு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் துருக்கியிலிருந்து ரகசிய ராணுவ விமானம் மூலம் பயணம் மேற்கொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த THE WASHINGTON POST செய்தி வெளியிட்டது
அவர் அதிகாரப்பூர்வ AIR FORCE ONE விமானத்தில் பயணிப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையிலேயே இந்த ரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகத் துருக்கியின் அங்காரா நகருக்கு டிரம்ப், கத்தார் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டு புதுப்பிக்கப்பட்ட புதிய ஜெட் விமானத்தைப் பயன்படுத்திச் சென்றிருந்தார்.
எனினும், அந்நாட்டிலிருந்து புறப்படும்போது அவர் எதிர்பாராதவிதமாக பழைய ஏர் போர்ஸ் ஒன் விமானத்தைப் பயன்படுத்தியது, புதிய விமானத்தின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவிற்குப் பல எதிரிகள் இருப்பதாகவும், அவர்கள் அதிபரைக் குறிவைத்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய அச்சுறுத்தல்களை முறியடிக்க அமெரிக்க நிர்வாகத்தின் கைவசம் உள்ள அனைத்துப் பாதுகாப்பு வழிமுறைகளும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
