செய்திகள் உலகம்
டெக்சாஸில் ஹெலிகாப்டர் விபத்து: இரு அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி
வாஷிங்டன்:
அமெரிக்கா நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் அமெரிக்கா ராணுவத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த விபத்து சலாடோ பகுதியில் புதன்கிழமை நிகழ்ந்ததாக சம்பந்தப்பட்ட ராணுவ முகாம் தெரிவித்துள்ளது.
ஃபோர்ட் ஹூட் ராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட AH-64E Apache தாக்குதல் ஹெலிகாப்டரே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
இந்தத் தகவலை ஃபோர்ட் ஹூட் முகாம் நிர்வாகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது ஃபோர்ட் ஹூட் முகாமின் பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று உள்ளூர் அவசரகால மீட்புக் குழுவினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இருப்பினும், அந்த ஹெலிகாப்டர் எந்த நோக்கத்திற்காகப் பயணித்தது என்பது குறித்த விவரங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் வரை அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்பட மாட்டாது எனக் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
