நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

32 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீண்ட தாயும் 18 நாள் குழந்தையும்: வெனிசுலாவை நெகிழவைத்த அதிசய மீட்பு

லா குவைரா: 

வெனிசுலாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு, 32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தாயும், அவரது 18 நாள் ஆண் குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலகையே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டயானா படினோ என்ற தாயும், அவரது 18 நாள் குழந்தையான ஜுவான் டேவிட்டும், இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், தீவிர மீட்புப் பணிகளின் மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டனர்.
தனது குழந்தையே உயிர் பிழைக்கத் தன்னை மன உறுதியுடன் வைத்திருந்ததாக டயானா படினோ தெரிவித்தார்.

"என் குழந்தை உயிருடன் இருக்கும் வரை நானும் உயிருடன் இருக்க வேண்டும் என்று உறுதியெடுத்தேன். அவன் இன்னும் சுவாசிக்கிறானா என்பதை அறிய அவனது மூக்கை அவ்வப்போது தொட்டு பார்த்துக் கொண்டிருந்தேன்," என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

புதன்கிழமை மாலை ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் குறைந்தது 1,719 பேர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேரிடருக்குப் பிறகு, ஜுவான் டேவிட் வெனிசுலா மக்களின் நம்பிக்கையின் சின்னமாக மாறியுள்ளார்.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது, லா குவைராவில் உள்ள தனது எட்டாவது மாடி குடியிருப்பில் துணி துவைத்துக் கொண்டிருந்த டயானா, முதலில் அது லேசான அதிர்வு என நினைத்து தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டார். ஆனால் சில நொடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்ததாக அவர் கூறினார்.

"நான் வானில் பறப்பது போலவும், பின்னர் மண்ணுக்குள் புதைந்தது போலவும் உணர்ந்தேன். எப்படி என் குழந்தையைக் கைவிடாமல் பிடித்துக்கொண்டே இருந்தேன் என்பது இன்றுவரை எனக்கே ஆச்சரியம்," என்றார் அவர்.

இடது கால் கான்கிரீட் சிதிலங்களுக்குள் சிக்கியதோடு, தலையிலும் காயம் ஏற்பட்டிருந்தபோதும், சக்தியை வீணாக்கக் கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் உதவிக்காக அவர் குரல் எழுப்பவில்லை.

இறுதியில், தனது சகோதரர் பெயர் சொல்லி அழைக்கும் சத்தத்தைக் கேட்டதும், "நான் இங்கே இருக்கிறேன்!" என்று முழு சக்தியுடன் குரல் கொடுத்ததாகவும், "உன்னை வெளியே எடுக்கும் வரை நான் இங்கிருந்து செல்ல மாட்டேன்" என்று சகோதரர் உறுதியளித்த தருணமே தனது மீட்பின் திருப்புமுனையாக அமைந்ததாகவும் டயானா பகிர்ந்துகொண்டார்.

அதைத் தொடர்ந்து, மீட்புக் குழுவினர் மிகுந்த கவனத்துடன் பல மணி நேரம் போராடி, தாயையும் குழந்தையையும் உயிருடன் மீட்டனர்.

இதற்கிடையில், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்போரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், மேலும் உயிருடன் மீட்கப்படுவோரின் எண்ணிக்கை குறித்த நம்பிக்கை நாளுக்கு நாள் மங்கிவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset