செய்திகள் உலகம்
ஆஸ்திரேலியாவில் ஆளைக்கொல்லும் சுறாக்களைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள்
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரைகளில் வரும் ஜூலை முதல் தேதியிலிருந்து சுறாக்களைக் கண்காணிக்க ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படவுள்ளன.
38 கடற்கரைகளில், அதிகாலை முதல் மாலை வரை கண்காணிப்புத் தொடரும்.
சுறாப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அடுத்த ஈராண்டில் சுமார் 107 மில்லியன் வெள்ளி செலவிடவிருப்பதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்தது.
இதில் வானூர்திக் கண்காணிப்பு முயற்சிக்கு ஒதுக்கப்படும் 30 மில்லியன் வெள்ளியும் அடங்கும்.
சுறாக்களைக் கண்டறியும் திறனை மேம்படுத்துவதற்காக, இரண்டு புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் சோதிக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மக்கள் கடற்கரைகளில் பயமின்றி நீந்துவதற்கான நம்பிக்கையைக் கொடுக்கும் என்றார் நியூ சவுத் வேல்ஸின் முதல்வர் கிறிஸ் மின்ஸ் (Chris Minns)
இம்மாதம் சிட்னி கடற்கரையில் ஒரு பெண், சுறாவால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து சுறா கட்டுப்பாட்டு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
