செய்திகள் இந்தியா
5 மாநில தேர்தல் தேதிகள் அறிவிப்பு: 7 கட்டங்களாக பிப்.10-இல் தொடங்குகின்றன
புது டெல்லி:
உத்தர பிரேதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா அறிவித்தார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக வரும் 15ஆம் தேதி வரை பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் இந்த 5 மாநிலங்களில் நான்கில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவதால், நடைபெற இருக்கும் தேர்தல் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா
தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் பஞ்சாப் மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அதே நேரம், அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி கடும் சவால் அளிக்கும் வகையில் முக்கிய கட்சியாக உருவெடுத்து வருகிறது.
இதன் காரணமாக, இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்படும். தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 மாநிலங்களில் இடம்பெற்றிருக்கும் 690 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 8.5 கோடி பெண்கள் உள்பட 18.3 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதியை பெற்றுள்ளனர்.
கோவா (40 தொகுதிகள்), பஞ்சாப் (117 தொகுதிகள்), உத்தரகண்ட் (70 தொகுதிகள்), உத்தர பிரதேசம் (403 தொகுதிகள்), மணிப்பூர் (60 தொகுதிகள்) உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
November 25, 2024, 8:43 pm
அமெரிக்கா குற்றம்சாட்டியும் அதானியை பிரதமர் மோடி கைது செய்யாதது ஏன்?: ராகுல் கேள்வி
November 25, 2024, 4:23 pm
உ.பி.பள்ளிவாசல் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 பேர் பலி
November 24, 2024, 1:23 pm
இந்தியாவில் செய்திக்கான செயலியில் டிவிட்டர் முதலிடம்: எலான் மஸ்க்
November 23, 2024, 12:15 pm
ஜார்க்கண்டில் பாஜக,காங்கிரஸ் இடையே கடும் போட்டி
November 19, 2024, 8:28 pm
ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம்
November 19, 2024, 6:16 pm
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
November 19, 2024, 6:04 pm
மெட்டாவுக்கு இந்தியா ரூ.213.14 கோடி அபராதம்
November 18, 2024, 10:09 pm
கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்: பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி விலகல்
November 18, 2024, 10:04 pm
பள்ளிவாசல்களில் ஜும்மா உரைக்கு முன் அனுமதி: சத்தீஸ்கர் வக்பு வாரியம்
November 17, 2024, 5:17 pm